மீமிசலில் நாளை 08.07.2020 ஒருநாள் முழு ஊரடங்கு.! வர்த்தக சங்கம் அறிவிப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் முன்பை விட தற்போது இரு மடங்காக அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாளை ஒருநாள் மீமிசலில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என மீமிசல் வர்த்தக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள ஏம்பக்கோட்டையில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீமிசல் வர்த்தக கழகத்தினர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி நாளை 08.07.2020 புதன்கிழமை ஒருநாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று மீமிசல் வர்த்தக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பால் கடை மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற நாட்களில் மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மற்ற வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். உணவகங்கள், மருந்து கடைகள் ஆகியவை அரசு அறிவித்துள்ளப்படி செயல்படும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments