கொரோனா எதிரொலி: கோபாலாப்பட்டிணம் பொதுமக்கள் பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.!



கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.


தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று 06-07-2020 (திங்கட்கிழமை) முதல் அரசின் அறிவிப்பின் படி பஜ்ர் தொழுகையில் இருந்து பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு வருபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஜமாஅத் சார்பில் சில விதிமுறைகளை பின்பற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

  • பள்ளிக்கு வருபவர்கள்  கண்டிப்பாக வீட்டிலேயே உளு செய்துவிட்டு வர வேண்டும்.
  • கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும்.
  • அரசின் உத்தரவின் படி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • தொழுகை முடிந்தவுடன் 20 நிமிடங்களில் பள்ளிவாசல் பூட்டப்படும்.
  • நோய் தொற்று பரவாமல்  தடுக்க  பள்ளியின் கழிவறைகள் பூட்டப்பட்டிருக்கும்.


குறிப்பு:கோபாலாப்பட்டிணத்தின் அனைத்து பள்ளிவாசலுக்கு பொருந்தும்.

தகவல்:
முஸ்லிம் ஜமாஅத் 
கோபாலப்பட்டிணம், மீமிசல் 
ஆவுடையார்கோவில் தாலுகா 
புதுக்கோட்டை மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments