புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்தி குமார் மத்திய உளவுப்பிரிவு துணை இயக்குனராக நியமனம்.!புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்தி குமார் மத்திய உளவுப்பிரிவு துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


புதுக்கோட்டை எஸ்பியாக உள்ள அருண்சக்தி குமார் கடந்த 2012ம் ஆண்டு நேரடி ஐ பி எஸ் அதிகாரியாக தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை எஸ்பியாக பணிபுரிந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் மத்திய உளவு பிரிவான ஐ பி யில் இணை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. அவர் தமிழக காவல் துறையில் இருந்து அயல் பணியாக டில்லிக்கு அனுப்பபடுவதாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக திருச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் புதுக்கோட்டை எஸ் பி பொறுப்பை  கூடுதலாக கவனிப்பார் எனவும் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண்சக்திகுமார் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments