ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.!



ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் உள்ளனர். இவர்கள் தினமும் அப்பகுதியில் இருந்து கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறைந்த வியாபாரிகளே மீன்கள், இறால்கள் வாங்க வருகின்றனர். மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் என்பதால் வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் வருவதில்லை. இதனால் மீன்கள், உள்ளூரில் மிக குறைந்த விலைக்கே விற்கப்படுவதால் மீனவர்கள் நஷ்டம் அடைகின்றனர். 

இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். 9-வது நாளாக நேற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளங்களில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தள பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments