புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாயின் கரை உடைப்பைத் தொடர்ந்து கதவணையும் உடைந்தது; விவசாயிகள் குற்றச்சாட்டு   
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் கல்லணைக் கால்வாயின் பெரிய கதவணை உள்ளது. இங்கிருந்து, பேராவூரணி, ஆயிங்குடி, நாகுடி உள்ளிட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.இந்நிலையில், ஆயிங்குடி பகுதிக்குச் செல்லக்கூடிய பிரதான கால்வாயில் இருந்து ஏரிக்குத் தண்ணீர் பகிர்ந்து விடக்கூடிய சிறிய கதவணையின் சுவர் நேற்று (ஜூலை 6) நள்ளிரவில் இடிந்து கால்வாய்க்குள் சாய்ந்துவிட்டதால், ஷட்டரும் சாய்ந்துவிட்டது.

இதையடுத்து, ஆயிங்குடி கல்லணைக் கால்வாய் பிரிவு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்புப் பணியில் இன்று (ஜூலை 7) ஈடுபட்டனர். கடந்த மாதம் இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் முன்னதாக வேம்பங்குடி கிழக்கில் கல்லணைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது கதவணையும் உடைந்து இடிந்து இருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழாண்டு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக சிறப்பு நிதியின் மூலம் கால்வாய் சீரமைப்பு செய்திருந்த நிலையிலும் கூட இவ்வாறு அடுத்தடுத்து கரை, கதவணை உடைந்ததற்கு அலுவலர்களின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாயின் கரை உடைப்பைத் தொடர்ந்து கதவணையும் உடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் கல்லணைக் கால்வாயின் பெரிய கதவணை உள்ளது. இங்கிருந்து, பேராவூரணி, ஆயிங்குடி, நாகுடி உள்ளிட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.


இந்நிலையில், ஆயிங்குடி பகுதிக்குச் செல்லக்கூடிய பிரதான கால்வாயில் இருந்து ஏரிக்குத் தண்ணீர் பகிர்ந்து விடக்கூடிய சிறிய கதவணையின் சுவர் நேற்று (ஜூலை 6) நள்ளிரவில் இடிந்து கால்வாய்க்குள் சாய்ந்துவிட்டதால், ஷட்டரும் சாய்ந்துவிட்டது.

இதையடுத்து, ஆயிங்குடி கல்லணைக் கால்வாய் பிரிவு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்புப் பணியில் இன்று (ஜூலை 7) ஈடுபட்டனர். கடந்த மாதம் இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் முன்னதாக வேம்பங்குடி கிழக்கில் கல்லணைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது கதவணையும் உடைந்து இடிந்து இருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழாண்டு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக சிறப்பு நிதியின் மூலம் கால்வாய் சீரமைப்பு செய்திருந்த நிலையிலும் கூட இவ்வாறு அடுத்தடுத்து கரை, கதவணை உடைந்ததற்கு அலுவலர்களின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments