மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்லங்குடி கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு.!அறந்தாங்கி சட்டடன்ற தொகுதி மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரக்கோட்டை ஊராட்சியில் பில்லங்குடி கிராம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்த பழைய டிரான்ஸ்பார்மரால் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டது.


இது குறித்து பலமுறை மின்வாரிய துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பில்லங்குடி கிராம மக்கள் இது குறித்து அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரெத்தினசபாபதியிடம் முறையிட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் பில்லங்குடி கிராமத்திலிருந்த பழைய டிரான்ஸ்பார்மரை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக 25 kv கொள்ளவு கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை வைத்தனர்.

பொதுமக்களின் நீண்ட கோிக்கையை ஏற்று  25KV கொள்ளவு கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி துவக்கி வைத்து மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில் மின்வாரிய துறை அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா சேதுராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் சத்யாகலா உதயக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சேகர், ஊராட்சி வார்டு உறுப்பினர் நாராயணன் மற்றும் பில்லங்குடி கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments