புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் கூடுதல் அரிசியை இம்மாதமே பெற்றுக் கொள்ளலாம்.! கலெக்டர் தகவல்.!புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-


புதுக்கோட்டை மாவட்டத்தில் இம்மாதம் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ரேஷன் கடைகளில் விலை கொடுத்து வாங்கியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்த தொகை வருகிற ஆகஸ்டு மாதத்திற்கு வழங்கப்படும் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஈடு செய்து கொள்ளப்படும். 

இதுகுறித்த தகவல், இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தெரிவிக்கப்படும். மேலும், நவம்பர் மாதம் வரை அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி வழங்கப்படும். 

குடும்ப அட்டைதாரர்கள், ஜூலை மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலைக் கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக புகார்கள் ஏதேனும் இருப்பின் குடும்ப அட்டைதாரர்கள் புதுக்கோட்டை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் 94450 00311 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments