புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்.!கொரோனா தொற்றால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த இளைஞர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். வீட்டிலேயே இருந்த அவர்களில் பலர் தங்கள் வருமானத்திற்காக விவசாயம் செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் தங்கள் வீடுகளிலேயே நாட்டுக்கோழிகள் வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.


இதற்காக நாட்டுக்கோழிகளில் உயர்ந்த ரகங்களை தேடித்தேடி வாங்கி வளர்க்க தொடங்கி உள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்குஞ்சுகள் வாங்குவதற்காக இளைஞர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு பதிவு செய்தவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. 

தற்போது பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஜனவரி மாதத்தில் கோழிக்குஞ்சுகளை பெற்றுக்கொள்ளலாம், என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக தரப்பில் கூறுகையில், ஒரு வாரத்திற்கு அதிகபட்சம் 350 நந்தனமசீது ரக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, ஒரு குஞ்சு ரூ.35-க்கு விவசாயிகளுக்கு வழங்கி வந்தோம். பதிவு செய்த ஒரு வாரத்தில் வழங்கினோம். 

ஆனால் தற்போது ஏராளமானோர் கோழிக்குஞ்சுகள் கேட்டு பதிவு செய்வதால் எங்கள் உற்பத்திக்கு ஏற்ப காலக்கெடு கொடுத்திருக்கிறோம். ஒரு நபருக்கு அதிகபட்சம் 50 குஞ்சுகள் வரை கொடுத்து வருகிறோம், என்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments