ரியாத் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பயணிகளுக்கு உதவிய தமுமுக.!சவுதி அரேபியா ரியாத் மண்டல தமுமுக ரியாத்திலிருந்து தாயகம் சென்ற தமிழர்களுக்கு விமான நிலையத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வழியனுப்பி வைத்ததது. ரியாத்தில் இருந்து வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் செங்கை வடக்கு மாவட்ட தமுமுக வரவேற்று இருப்பிடம் அனுப்பி வைத்தார்கள்.


சவுதி அரேபியா ரியாத்தில் வேலை இழந்து , வருமானம் இழந்து , தாயகம் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு தாயகம் செல்ல தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ரியாத் மத்திய மண்டலத்தின் சார்பில் வெளிநாட்டுத் தமிழர் மீட்பு உதவி குழு என்ற ஒரு வாட்ஸப் குழுமத்தை உருவாக்கி தொடர்ந்து தூதரக வாயிலாக வந்தே பாரத் திட்டம் மூலமாகவும்  தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு செய்யும் தனி விமானங்கள் மூலமாகவும் தேவையான வழிகாட்டுதலையும் ,  உதவிகளையும் செய்து தாயகத்திற்கு அனுப்பி வருகிறோம். 

அதன் அடிப்படையில் ஜித்தா தமிழ் சங்கத்தின் முயற்சியில் ஜித்தா , ரியாத் , தம்மாம் ஆகிய நகரங்களிலிருந்து தமிழகம் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.


விமானத்திற்கு பயணிகளை ஒருங்கிணைக்க மண்டல தமுமுக செயலாளர் நல்லூர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் தாதாபாய் டிராவல்ஸ் நிர்வாகிகளுடன் இணைந்து ரியாத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான சீட்டை பெறுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொண்டார். 

அதனை தொடர்ந்து தமுமுக மமக ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களின் வழிகாட்டுதல்படி கடந்த 9/7/2020 வியாழக்கிழமை  இரவு சரியாக 10 மணி அளவில் ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அனைத்து பயணிகளும் வந்தடைந்தனர். ரியாத் மண்டல மற்றும் கிளை தமுமுக மமக நிர்வாகிகள் ரியாத் சர்வதேச விமான நிலையம் சென்று ரியாத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல் , பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விமான நிலையத்தைச் சார்ந்த அனைத்து பணிகளிலும் உடனிருந்து பயணிகளுக்கு உதவி செய்தனர். 

அதிகாலை 2:00 மணியளவில் அனைத்து பணிகளையும் முடித்து பயணிகளை பத்திரமாக விமான நிலையத்திற்கு உள்ளே அனுப்பி வைத்த பின் அனைத்து நிர்வாகிகளும் இல்லம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதனைத் தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்தில் இருந்து வந்த பயணிகளை செங்கை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் சகோதரர் எஸ்கே ஜாஹிர் உசேன் அவர்களும் இணைந்து பயணிகளை வரவேற்று அவர்களின் பயணப் பொதிகளை வாகனத்தில் ஏற்றி அவர்களுடைய தங்கும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சேவையை பாராட்டி பயனடைந்தவர்கள் தமுமுக- மமக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து ஆடியோ பதிவினை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்...

ரியாத் விமான நிலையத்தில் ரியாத் மண்டல மமக செயலாளர் ஆரூர் நிசார் அலி,மண்டல மக்கள் தொடர்பாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக்,ரியாத் மண்டல செயற்குழு உறுப்பினர் அரசை ஆஷிக் இக்பால்,மண்டல தமுமுக துணை செயலாளர் அஹமத் கபீர்,பத்தா கிளை செயலாளர்  அபுதாஹிர்,பத்தா கிளை பொருளாளர் அஜி முஹம்மது,மண்டல தொண்டரணி செயலாளர் தாஜுதீன்,ரியாத் மண்டல செயற்குழு உறுப்பினர் அக்பர் கான், பத்தா கிளை உறுப்பினர் மீமிசல் உமர்தீன் ஆகியோர் களப்பணியாற்றினார்கள்.

தாயகம் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்களை தாயகம் செல்வதற்காக உழைத்த ஜித்தா தமிழ் சங்கத்தை சார்ந்த அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மண்டல தமுமுக சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்
ஊடகப்பிரிவு
தமிழ் தஃவா - தமுமுக  &மமக 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவுதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments