ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமுமுக சார்பில் நாளை (14.07.2020) நான்கு இடங்களில் முற்றுகை போராட்டம் அறிவிப்பு.!தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 129 முஸ்லிம்களை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்து நீதிமன்றம் பிணை வழங்கியும் விடிவிக்காமல் உள்ள  தமிழக அரசை கண்டித்தும்,


அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களை தாயகத்திற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தியும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. 

புதுக்கோட்டை கிழக்கு தமுமுக மாவட்ட தலைவர் அபு சாலிகு வெளியிடும் அறிவிப்பு: 11.07.2020

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில தலைமையகத்தின் போராட்ட அறிவிப்பினை நடைமுறை படுத்தும் விதமாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் 

அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், 

ஆவுடையார்கோவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், 

ஆலங்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், 

மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகம் 

ஆகிய நான்கு இடங்களிலும் 14.07.2020 செவ்வாய்க்கிழமை சரியாக 11.00 மணிக்கு போராட்டம் நடைபெறும். 

இதில் தோழமை கட்சிகள், இயக்கங்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஆகியோரையும் போராட்ட களத்திற்கு அழைத்து சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து போராட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

வெளியீடு: 
மாவட்ட தலைமையகம் 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments