புதுக்கோட்டை: கஜா புயலில் இருந்தே மீளல இப்போ கொரோனா வேற பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அண்ணாமலையான் குடியிருப்புப் பகுதியில் இருக்கிறது மாற்றுத்திறனாளி முத்தையாவின் ஓட்டுவீடு. சேலைகள்தான் சுற்றுச்சுவர்கள். கவிழ்ந்துவிடாமல் இருக்க வீட்டைச் சுற்றிலும் கம்புகள் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது
கஜா புயலால் வீடு உருக்குலைந்த நிலையில், வீட்டின் துரும்பைக்கூட சீரமைக்க முடியாத நிலை முத்தையாவுக்கு அமுதா என்ற மனைவியும், 12-ம் வகுப்பு முடித்த சங்கரி என்ற மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும் என 2 பிள்ளைகள். 4 பேரும் எப்போது இடிந்து விழும் என்று தெரியாத இந்த வீட்டில்தான் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில், முத்தையா, தன்னால் முடிந்த சிறு, சிறு வேலைகளைச் செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து மட்டும் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் உடல் சரியில்லாமல் போகவே, அந்தச் சொற்ப வருமானமும் இல்லைகணவரின் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்ட அமுதா, 100 நாள் வேலையில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் குடும்பத்தை நகர்த்தினார்.
 100 நாள் வேலையும் இல்லை. மழைக்கு ஒழுகும் வீடு, ஒரு நேரச் சாப்பாடு என்ற நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டது. வேறுவழியின்றி முத்தையாவின் மகள் சங்கரி பெட்ரோல் பங்க் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்து வருகிறார். கொரோனாவால் அவ்வப்போது, இந்த வேலையும் கிடைக்காமல் போகவே, என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கித் தவித்து வருகின்றனர் அமுதாவிடம் பேசினோம், ``மாற்றுத்திறனாளின்னு பெரும்பாலானவங்க அவருக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. அவர் சம்பாதிக்கிறது சொற்ப வருமானமாக இருந்தாலும், அதை வச்சு சிக்கனமாகக் குடும்பம் நடத்திக்கிட்டு வந்தேன். 


அவர் வேலை இல்லாமல் முடங்கினதுக்கு அப்புறம்தான் எங்க குடும்பத்துக்குக் கஷ்டகாலம். கஜா புயல் வந்து வீட்டை அப்படியே சாய்த்துப் போட்டுருச்சு. விழுந்திடாம இருக்க சுற்றிலும் கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுத்து வச்சிருக்கோம்.சேலையைத்தான் வீட்டைச் சுற்றிலும் சுவர்போல சுத்தி வச்சிருக்கோம். கொஞ்ச நேரம் மழை பெய்தாலும், அன்னைக்கு ராத்திரி முழுசும் தூங்க முடியாது. வீடே சொத சொதன்னு ஆகிடும். படிக்கிற பிள்ளைகளை வச்சிக்கிட்டு ரொம்பவே கஷ்டம். 
கஜா புயலில் இருந்தே இன்னும் எங்க குடும்பம் மீள முடியாத நிலையில, இப்போ கொரோனா வந்து எங்க குடும்பத்தை மொத்தமாக நொடிச்சுப் போட்டுருச்சு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள நல்லா படிக்க வச்சு அதிகாரிகளாக ஆக்கணும் அதுதான் எங்களோட ஆசை.பெருசா கடன் எல்லாம் வாங்கி பிள்ளைகளுக்கு நாளைக்கு கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது. வேற வழியே இல்லாமல்தான் வீட்டிலேயே எந்த வேலையும் செய்யவிடாத பொம்பள பிள்ளையை பெட்ரோல் பங்க் வேலைக்கு அனுப்பினோம். பொம்பள பிள்ளை சம்பாதிக்கிற வருமானத்தை வச்சுதான் இப்போ குடும்பம் ஓடுகிறது. சில தினங்கள் இந்த வேலையும் கிடைக்காமல் போகிறது. இது எல்லாம் எத்தனை நாளுக்குன்னு தெரியலை" என்கிறார் வேதனையுடன்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments