நேசக்கரம் நீட்டும் எஸ்டிபிஐ... கொரோனாவால் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்யும் இளைஞர்கள்... குவியும் பாராட்டு..!


கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை குடும்ப உறுப்பினர்கள் கூட பெற்று நல்லடக்கம் செய்ய முன்வராத நிலையில், உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர் மத நம்பிக்கை பிரகாரம் நல்லடக்கம் செய்தும், எரியூட்டியும் மனிதநேயப் பணிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தமிழகம் முழுவதும் சேவையாக செய்து வருகின்றனர்.

இறந்த உடல்களைப் பெற்று சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, தேவையான பாதுகாப்பு உடைகள் அணிந்து, உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி இப்பணிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னையில் மட்டும் இதற்காக 6 நபர்களைக் கொண்ட 18 குழுக்களை SDPI கட்சி தயார்படுத்தி இப்பணிகளை செயல்படுத்தி வருகின்றது. சென்னை தவிர்த்த தமிழகத்தில் நெல்லை,விழுப்புரம், ஈரோடு, தென்காசி,மதுரை போன்ற பகுதிகளிலும் புதுவையிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் மூலம் இத்தகைய மனிதநேயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SDPI கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் கூறும் போது;- இன்று  வரை சென்னையில் மட்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் குழு மூலம் சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்த 100க்கும் மேற்பட்ட உடல்களும் பிற மாவட்டங்களில் சேர்த்து 30க்கும் மேற்பட்ட உடல்கள் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை பாராட்டி சென்னை மாநகராட்சி சார்பில் 1000 PPE கிட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments