பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக புதிய கட்சி தொடக்கம்.!      விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா சிங்கனூரை சேர்ந்தவர் சபரிமாலா. இவர், நாகை மாவட்டம் சிக்கல் அடுத்த பனைமேட்டில் உள்ள தனது இல்லத்தில் ‘பெண் விடுதலை கட்சி’ என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார். கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:


இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நிகழ்வதால் என் அரசு ஆசிரியர் பணியை துறந்து பெண் விடுதலை கட்சியை தொடங்கி உள்ளேன். பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், தலை முறை மாற்றத்துக்காகவும் தொடங்கப்பட்டதே பெண் விடுதலை கட்சி என்றார்.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அனிதா இறந்தபோது, அதற்காக நியாயம் கேட்டு உண்ணாவிரதம் தொடங்கி தன் அரசு ஆசிரியை பணியை ராஜினாமா செய்தவர் சபரிமாலா.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments