ஏம்பல்: `ஹைடெக் எக்ஸ்ரே மிஷின்’ - ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் இளைஞர்கள்.!ஏம்பல் கிராமத்து இளைஞர்கள் ஊரடங்கு நேரத்திலும் 34 பேரிடம் நிதி திரட்டி ரூ.2.69 லட்சம் மதிப்பிலான எக்ஸ்ரே மிஷினை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இலவசமாக வாங்கிக்கொடுத்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் ஏம்பல். இங்குள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்தான் தங்கள் ஊரில் உள்ள அரசு கூடுதல் ஆரம்பச் சுகாதார நிலையத்தை, வட்டார மருத்துவமனையாக மாற்றும் முயற்சியில் இறங்கிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏம்பல் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஏராளமான மருத்துவ உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.


இந்த நிலையில் தற்போது ஊரடங்கு நேரத்திலும் 34 பேரிடம் ரூ.2.69 லட்சம் நிதி திரட்டி ஹைடெக் எக்ஸ்ரே மிஷினை வாங்கிக்கொடுத்துள்ளனர். ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவிகள், ஈ.சி.ஜி பரிசோதனைக் கருவி, ஸ்கேன் வசதி, ஆம்புலன்ஸ் வசதி, தற்போது ஹெடெக் எஸ்ரே மிஷின் வசதி உள்பட அரசு மருத்துவமனையில் இருக்கும் அத்தனை வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் காணப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வரும் நிலையிலும், நிதி திரட்டி எக்ஸ்ரே மிஷினை நிறுவியுள்ள இளைஞர்களுக்குச் சுற்றுவட்டாரப்பகுதி கிராம மக்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments