கோபாலப்பட்டிணம் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.!மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்பேரில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார், கோபாலபட்டினம் கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.


அப்போது அந்த கடையின் தரைப்பகுதியின் கீழ் குழி தோண்டி, அதில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து தரையை தோண்டி, அங்கிருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளர் சபியுல்லாவை (வயது 38) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments