நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா? வெற்றிலை, கடலை மிட்டாய்.!



அச்சுறுத்தி கொக்கரிக்கும் கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலரும் தங்களது உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றி வருகின்றனர்.

ஒருபுறம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்ட நிலையிலும் எப்போது இயல்பு நிலை திரும்புமோ என்ற ஏக்கம் அனைவருள்ளும் எழத்தான் செய்கிறது. 

தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து ஏராளமானோர் சாப்பிட்டு வருகின்றனர். 

இதனால் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தை விட வெற்றிலை, கடலை மிட்டாய் விற்பனை கூடியுள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, வெற்றிலை முத்துப்பேட்டை, மதுரை பெரியகுளம் ஆகிய ஊர்களில் இருந்து வருகிறது. 

வழக்கமாக வெற்றிலையை கசாயம் காய்ச்சி குடிப்பதற்காக பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து 10 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என கருதுவதால் கடலை மிட்டாய் விற்பனை வெகுவாக கூடியுள்ளது என்றார். 

உணவியல் நிபுணர் ஒருவரும் வெற்றிலையோடு கடலை மிட்டாயை சேர்த்து 4 வயதுக்கு மேற்பட்டோர் சாப்பிடலாம், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments