தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் கலெக்டர் மற்றும் டி.ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தொண்டி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்போருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை தடுக்கக்கோரி தொண்டி போலீஸ் நிலையத்தில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க ஐமாத் நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்ற 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். ஆனால் அந்த கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிடித்து கொடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது வருத்தமளிப்பதாக உள்ளது.
கஞ்சா விற்பனை செய்தவர்கள் சாதாரணமாக வெளியில் சுற்றிவரும் நிலையில் அவர்களை பிடிக்க உதவிய இளைஞர்கள் மீது வழக்குபதிவு செய்தது கண்டிக்கத்தக்கது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீதான வழக்கினை திரும்ப பெற வேண்டும். மேலும் கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments