கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் முழு ஊரடங்கு பிறப்பித்தனர். இதனால் கோட்டைப்பட்டினம் பகுதியில் அனைத்து கடைகளும் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோட்டைப்பட்டினம் வர்த்தக சங்கத்தினர் கடைகளை திறக்க அனுமதி அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நேற்று கோட்டைப்பட்டினத்தில் வருவாய்த்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தாசில்தார் வில்லியம் மோசஸ், டாக்டர் ராம்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வியாபாரிகள் சங்கத்தினர், விசைப்படகு சங்கத்தினர், நாட்டுப்படகு சங்கத்தினர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, வியாபாரிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments