மணமேல்குடியில் மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்.!



மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மணமேல்குடியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


மணமேல்குடியில் மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மணமேல்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்திராமசாமி தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமநாதன், காங்கிரஸ் பிரமுகர் போகர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கலைமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments