நாகுடியை சேர்ந்த முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியவருக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு.!



அறந்தாங்கி அருகே நாகுடியை சேர்ந்த 55 வயதுடையவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


மேலும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று, சிகிச்சையில் குணமடைந்த 55 வயதுடையவர் நாகுடிக்கு திரும்பி வந்தார். அவருக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், கிராம மக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்று, காரில் ஊர்வலமாக கூட்டிச்சென்றனர். 

அப்போது சாலையில் நின்ற பொதுமக்கள் கைதட்டியும், வணங்கியும் வரவேற்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், நாகுடி பகுதியில் தொற்று பரவாமல் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் முகமது இஸ்திரி, மருத்துவ மேற்பார்வையாளர் ஞானவடிவேல் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

எங்கள் பகுதியை சேர்ந்தவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைய சிகிச்சை வழங்கிய டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம், என்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments