புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ‘ரேஸ்’ குழு தொடக்கம்.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 38 காவல் நிலையத்திலும் அந்தந்த எல்லைகளுக்குள் எந்த ஒரு பிரச்சனை என பொதுமக்கள் தகவல் அளித்தால் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு ரேஸ் குழு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மூன்று காவலர்கள் வாக்கி டாக்கி மற்றும் இருசக்கர வாகனங்கள் உடன் தயாராக இருப்பார்கள் அவர்கள் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுக்கு என்ன பிரச்சனை அந்த சம்பவ இடத்தில் என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து தீர்வு காணும் வகையிலும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதற்காகவும் இந்த ரேஸ் குழு தொடங்கப்பட்டுள்ளது

இந்த சிறப்பு ரேஸ் குழுவை இன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

பொதுமக்களிடம் காவலர்கள் பொறுமையாகவும் கோபப்படாமல் நிதானத்துடன் அவருடைய கோரிக்கையை கேட்க வேண்டும்.

எந்தவிதமான அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் காவலர்கள் பணியாற்ற வேண்டும் மேலும் பொதுமக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையானாலும் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று விசாரணை செய்வதற்கு இந்த ரேஸ் குழு பயன்படுகிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில் காவலர்கள் மிகுந்த மன அழுத்தத்தோடு தான் பணியாற்றி வருகிறார்கள் அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்குவதற்கு சிறப்பு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒவ்வொரு உட்கோட்ட காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு அந்த வகுப்புகளில் காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு எவ்வாறு காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பது குறித்து கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது என்றார். பேட்டியின் போது காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments