கோட்டைப்பட்டினத்தில் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு.!புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று நாட்டுப்படகு மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பினார். அவருடைய வலையில் 3 ராட்சத நண்டுகள் சிக்கியிருந்தன. ஜம்மான் நண்டுகள் என்று கூறப்படும் இந்த நண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 2 கிலோ எடை கொண்டதாகும். 

இந்த வகை நண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நண்டின் விலை 1 கிலோ ரூ.1,800 ஆகும். இதனால் அந்த மீனவர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த வகை நண்டுகள் எப்போதாவதுதான் வலையில் சிக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments