புதுக்கோட்டையில் வரும் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு.! வியாபாரிகள் முடிவு.!



புதுக்கோட்டை நகராட்சியில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை  8 நாட்கள் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றது மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இதுவரை ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆலங்குடி கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த அந்த பகுதியில் உள்ள வர்த்தக வணிக நிறுவனங்கள் கடைகளை அடைத்தும் நேரங்களை குறைத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸை தடுப்பது குறித்து வர்த்தகர்கள் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், காய்கறி கடை சங்கத்தினர் நகைக்கடை உரிமையாளர்கள் வர்த்தக கழக நிர்வாகிகளுடன் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பால் மற்றும் மருந்தகத்தை தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் முழுமையாக அடைக்க வர்த்தக வணிக நிறுவனங்கள் காய்கறி கடை நகைக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்ததையடுத்து வரும் 24 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் தாசில்தார் முருகப்பன் மற்றும் வர்த்தக வணிக உரிமையாளர்கள் பல்வேறு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments