புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 500 படுக்கைகள்.! கலெக்டர் தகவல்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் 21 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 1,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று பகுதிகள் கண்டறிந்து 37 கட்டுப்பாட்டு மண்டலங்களாக அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்துதல் முகாம்களில் 124 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 631 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஒவ்வொருநாளும் காபி, சிக்கன் சூப், பால், கடலைப்பருப்பு, சுண்டல், சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, காய்கறி பிரியாணி, நெய் மிளகு பொங்கல், வேகவைத்த பாசிப்பயறு, ரவா முந்திரி பொங்கல் போன்ற பல்வேறு வகையான சத்தான உணவுகள் தரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயானாக நோயாளிகள் பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments