அறந்தாங்கியில் MJTS தொழிற்சங்கம் சார்பில் சாலைமறியல் அறிவிப்பு
   
       அறந்தாங்கி அக்னிபஜார் - புதுவயல் சாலையில் MR திருமண மண்டபம் அருகில்27-06-20 அன்று முதல் 15 ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த இடத்திற்கு நிரந்தர அங்கிகாரம் வழங்குமாறு அறந்தாங்கி நகராட்சி, வட்டாச்சியர், கோட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் கடந்த 19-07-20 அன்று அதிகாலை MJTS  தொழிற்சங்க ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகை அந்த இடத்தில் காணவில்லை. இது பற்றி புகார் கொடுக்க அறந்தாங்கி காவல் நிலையம் சென்ற தொழிற்சங்க நிர்வாகிகளை காவல் ஆய்வாளர் வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட சொல்லி வாங்கியுள்ளார். 


எனவே மாவட்ட நிர்வாகம், அறந்தாங்கி நகராட்சி மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 27-07-20 அன்று காலை 9மணிக்கு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குடும்பத்துடன் அக்னிபஜாரில் சாலைமறியலில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments