இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் உயர் கல்வி உதவித் திட்டம்-2020 மூலம் விண்ணப்பிக்க நவாஸ் கனி MP அழைப்பு.!இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மையான மாணவர்கள், தந்தையை இழந்தவர்கள் மற்றும் பொருளாத நெருக்கடி காரணமாக உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் திட்டம் மூலம் உதவி செய்து வருகிறார்கள்.


அதனடிப்படையில் இந்த ஆண்டு இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சுமார் 600 மாணவர்களுக்கு உதவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் உதவித் திட்டம் -2020 மூலம் பயன்பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

உயர் கல்வி உதவித் திட்டம் - 2020

விண்ணப்பிக்க


1.இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 600 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது.

2.விண்ணப்பங்கள்யாவும் வரும் ஆகஸ்ட் 15- 2020 (15.08.2020)-க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

3.விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மனிதநேயம் கொண்ட நவாஸ்கனி எம்.பி அவர்களின் இந்த அறிவிப்பை இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments