புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இ-பாஸ் பெறாமல் வெளிமாவட்டங்களுக்கு வாகனங்களை இயக்கினால் வழக்கு.! கலெக்டர் எச்சரிக்கை.!!



கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.


குறிப்பாக மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையே வாகனங்களில் பயணிக்க அவசியம் இ-பாஸ் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இ-பாஸ் பெறப்பட்ட வாகனங்களை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து, வெளிமாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பஸ், மினி பஸ், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித பயணிகள் வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்றபின்னரே இயக்க வேண்டும். இ-பாஸ் பெறாமல் இயக்கி பயணிகளுடன் மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் பிடிபட்டால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் மீது வழக்கு தொடரப்படும். 

மேலும் வாகன உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் மீது வட்டார போக்குவரத்து துறையின் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்திற்குள் இயக்கப்படும் வாகனங்களை பொறுத்தமட்டில் அத்தியாவசிய அல்லது அவசர தேவைகளுக்கு மட்டும் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் நபர்கள் பயணிக்கவும், முககவசம், கையுறை பயன்படுத்துவதை தவறாமல் கடைப்பிடித்து பயணம் செய்ய வேண்டும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments