ஆலங்குடி அருகே தனக்குதானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை நண்பர்களுக்கு அனுப்பி இளைஞர் தற்கொலை.! போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரித்ததால் பரபரப்பு.!கண்ணீர் அஞ்சலி என போஸ்டர் தயார் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள உருமநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னக்கருப்பன். இவரது மகன் சதீஷ்குமார்(வயது 19). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார்.

இந்தநிலையில், இவர் திடீரென தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில், தோற்றம், மறைவு குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊருக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பலா மரத்தில் கடந்த 18-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தோட்ட உரிமையாளர் பார்த்து அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தினார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ்குமார் உடலை மீட்டு போலீசாருக்கு தெரிவிக்காமல் எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கே.வி.கோட்டை கிராம நிர்வாக அதிகாரி காமாட்சி ஆலங்குடி போலீசில் புகார் செய்தார்.

ஆலங்குடி போலீசார் உருமநாதபுரம் சென்று சதீஷ்குமாரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், சதீஷ்குமாரின் தந்தை உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments