திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.! குடிநீர் இணைப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.!திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) சங்கர் வரவேற்று பேசினார்.


கொத்தகோட்டை கவுன்சிலர் கருப்பையா பேசுகையில், ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை ஆயிரம் ரூபாய் என்பதை ரத்து செய்து, பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க அரசு முன்வர வேண்டும், என்றார். 

குலமங்கலம் கவுன்சிலர் செல்வராணி பேசுகையில், ஊராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். 

மேலும் கவுன்சிலர்கள் சிலர், 15-வது மானிய குழுவில் 100 நாள் வேலை திட்டத்தில் எப்போது வேலை வழங்கப்படும், என்று கேட்டனர். அதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments