அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொது குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டம் (ஜல் ஜீவன் திட்டம்) வாயிலாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும் புதிதாக இணைப்பு வழங்கவும், ஏற்கனவே குடிநீர் இணைப்பு உள்ளவர்கள் அல்லது வீட்டின் அருகில் குடிநீர் இணைப்பு உள்ளவர்களுக்கும் வைப்புத்தொகையாக ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலான வைப்புத்தொகை ஊராட்சியின் மூலம் நிர்ணயம் செய்து வசூல் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வைப்புத்தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வேலை, வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் இணைப்பு வைப்புத்தொகையை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பேரிடர் காலம் முடிவடைந்த பின்னர் வசூல் செய்ய வேண்டும் என்றும், வைப்புத்தொகை வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments