புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்தகங்களில் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்யத்தடை.! கலெக்டர் அதிரடி.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்தகங்களில் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. 

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக கோவிட் பரிசோதனை முகாம்கள் அதிக அளவில் மேற்கொண்டு நோய் தொற்றை கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அந்த வகையில் புதுகோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்தகங்களில் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்களிடம் கொரோனா நோய் அறிகுறியுடன் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க அனைத்து தனியார் மருத்துவர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேற்கூறிய நோய்களுக்கு மருத்துவரின் மருந்துச் சீட்டின் பெயரில் மருந்துகள் வாங்கப்பட்டால் அந்த நோயாளிகளின் முழு விபரத்தினை மருந்து விற்பனை செய்யும் கடைகள் மாவட்ட கட்டுப்பாட்டு மைய 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை மீறி விற்பனை செய்யும் மருந்துக்கடை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments