ஏம்பல் பாலியல் வன்கொடுமையில் பலியான சிறுமியின் தந்தை எஸ்பி அலுவலகத்தில் புகார்.!அரிமளம் அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டாள்.


அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளித்தார். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் நிதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சமும் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரும் நிதி உதவி வழங்கினர். 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், “சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு நிவாரணமாக அரசு மற்றும் அரசியல் கட்சியினர் வழங்கிய காசோலை மற்றும் ரொக்கம் என மொத்தம் ரூ.15 லட்சத்து 42 ஆயிரத்து 500-ஐ என்னிடம் இருந்து சிலர் வாங்கி வைத்துக்கொண்டு தர மறுக்கின்றனர். 

பணத்தை கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments