GPM மீடியா செய்தி எதிரொலி: வெளிச்சம் பெற்ற கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதி.!



கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால், அவுலியா நகர் இருளில் மூழ்கியுள்ளது என நேற்று 27.07.2020 GPM மீடியா இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் வெளிச்சம் பெற்ற அவுலியா நகர்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் GPM மீடியா செய்தியின் எதிரொலியாக அவுலியா நகர் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியத் தொடங்கின.


குறிப்பு: கடந்த ஆறு நாட்களாக எரியாத தெருவிளக்கு சம்மந்தமாக கவுன்சிலர், வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் என அனைவரிடமும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி மன்ற நிர்வாகம் இன்று, நாளை என ஒவ்வொரு நாட்களாக காலக்கெடுக்களை சொல்லி வந்தார்கள் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே பொறுமை இழந்த அப்பகுதி மக்கள் GPM மீடியாவில் செய்தி வெளியிட வேண்டி புகைப்படம் மற்றும் விவரங்களை அனுப்பினார்கள் அதனடிப்படையில் இந்த செய்தி GPM மீடியாவில் பதிவு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளை போர்கால அடிப்படையில் முன்னெடுக்கும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தனி அலுவலர் அவர்களுக்கு GPM மீடியா குழுமம் சார்பாக பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்..!

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments