புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயன்பெற அழைப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயன்பெற ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 5 ஆயிரம் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் காப்பீடு செய்ய 2 சதவிகித பிரிமியத் தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவிகிதம் மானியமும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவிகிதம் மானியமும்  வழங்கப்படும்.

இரண்டரை ஆண்டு முதல் 8 ஆண்டு வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள் மற்றும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வயதுள்ள வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும். 

அதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீட்டுக் கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகிப் பயன்பெறலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments