புதுக்கோட்டை மாவட்டத்தில் மேம்பாட்டு திட்டத்தில் ஆடு வளர்க்க விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக 2019-20-ம் ஆண்டுக்கான தேசிய கால்நடை இயக்கம் ஊரக புறக்கடை செம்மறியாடுகள், வெள்ளாடுகள் மேம்பாட்டு திட்டம் அன்னவாசல், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்கீழ். ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 45 பயனாளிகள் வீதம் 3 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 135 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப் படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 5 முதல் 6 மாத வயதுடைய ஒரு கிடா ஆடு மற்றும் 4 முதல் 5 மாத வயதுடைய 10 ஆடுகள் கொள்முதல் செய்து வழங்கப்படும். ஒரு பயனாளிக்கான மொத்த செலவினத் தொகை ரூ.66 ஆயிரத்தில் பயனாளி தனது பங்கு தொகையாக 10 சதவீத தொகை ரூ.6,600 செலுத்த வேண்டும். 

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ள நிலமற்ற ஏழைகள் சிறு, குறு, விவசாயிகள், அவர்களது பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வருகிற 10-ந் தேதிக்குள் கால்நடை உதவி மருத்துவரிடம் அளிக்க வேண்டும். 

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், பெண் விவசாயிகள் விதவை, ஆதரவற்ற விதவை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்பட உள்ள மொத்த பயனாளிகள் எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கு குறையாமல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments