புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆதார் கார்டு பெற புதிய வசதி அறிமுகம்.!ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் தங்களது விபரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடல் இயக்கக்குறைபாடுயுடையோர், புறஉலகுசிந்தனையற்றோர், மனவளர்ச்சிகுன்றியோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் இதரவகை மாற்றுத்திறனாளிகளில் ஆதார் அட்டை எடுக்க இயலாதவர்கள், COVID -19 ஊரடங்கு காலகட்டமாக உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் தங்களது பெயர், முகவரி, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை விபரம் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் 04322 - 223678 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தின் ddawopdk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ உடன் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments