புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 986 பேர் உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 3,050 ஆக உயர்ந்தது.

கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் எப்போது தான் முடிவுக்கு வருமோ?. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடு இல்லை. தினமும் தொற்று அதிகரித்து தான் வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் முன்பை விட தற்போது அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 114 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 73 பேர் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பினர். தற்போது 986 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி 3 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,028 பேர் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 36 ஆகும்.

கீரனூரில் அ.தி.மு.க. பிரமுகரின் 32 வயது மகன் கொரோனாவுக்கு பலியானார். இந்த சம்பவம்அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments