மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து புதுக்கோட்டையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.!புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர், சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் கோரிக்கைகள் குறித்து பேசினார். 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்கள், நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்திட கோரியும், வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர்கள் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.Post a comment

0 Comments