அறந்தாங்கியில் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!



மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரக்குழு சார்பில் அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்வில் (1)நாட்டின் விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் பாழக்ககூடிய நாட்டின் இயற்கை வளங்களை அழித்து கார்ப்பரேட் கொள்கைக்கு வழிவகுக்கக் கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பினை வரைவு சட்டத்தினை (EIA 2020) திரும்பப் பெறு!

(2)குலக்கல்வி மற்றும் மும்மொழிக் கல்வியை திணித்து கல்வியை வியாபாரமாக்குவதோடு ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி படிப்பு கனவை நாசமாக்க கூடிய மற்றும் மாநில உரிமையை பறிக்க கூடிய புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற!

(3)நடப்பு கல்விஆண்டிற்கான கல்லூரி மாணவர்களின் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை வெளிப்படாத நிலையில் கலை அறிவியல் கல்லூரிகள் தற்போது மாணவர் சேர்க்கையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தி வழிகாட்டு நெறிமுறைகள் வந்த பிறகு மாணவர் சேர்க்கை நடைபெற வழிவகை செய்ய வேண்டும்! 

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments