கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தில் ஒரு தேங்காயில் இரு கன்றுகள்.!



கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் விவசாயி. இவரது தோட்டத்தில் நின்ற ஏராளமான தென்னை மற்றும் பல மரங்கள் கஜா புயலில் சாய்ந்தது. 

இதனால் அவர் புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்ய தனது தோட்டத்தில் நின்ற மரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தென்னை நெற்றுகளை பதியம் அமைத்து பாதுகாத்து வந்தார். 

தற்போது அதில் கன்றுகள் வளர்ந்துள்ளது. அதில் ஒரு தேங்காய் நெற்றில் இருந்து 2 கன்றுகள் முளைத்துள்ளது. இதனை அந்தபகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.


Post a comment

0 Comments