புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க வசதி.!புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்களில் பலருக்கு கோரிக்கை மனுக்களை எப்படி எழுதுவது என்று தெரிவதில்லை. கலெக்டர் அலுவலகம் அருகே சிலர் திங்கட்கிழமை தோறும் அமர்ந்து பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வருகின்றனர்.

இதற்கு குறிப்பிட்ட தொகையை அவர்களிடம் வசூலிக்கின்றனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுப்பதற்கான வசதியை கலெக்டர் உமாமகேஸ்வரி ஏற்படுத்தி உள்ளார். 

கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் அருகே வருவாய்த்துறை ஊழியர்கள் 3 பேர் நேற்று அமர்ந்திருந்து பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்தனர். நேற்று முதல் இனி வரும் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து மனு எழுதி கொடுக்கும் பணியில் ஊழியர்கள் இருப்பார்கள். பொதுமக்கள் நேரிடையாக சென்று கோரிக்கையை தெரிவித்து மனுவாக எழுதி பெற்றுக்கொள்ளலாம்.


Post a comment

0 Comments