புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைகளில் பொதுமக்கள் கவனமாக இருக்க கலெக்டர் எச்சரிக்கை.!பருவமழை தொடங்க உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரி, கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

குழந்தைகள், சிறுவர்களை பெரியவர்கள் துணையின்றி நீர்நிலைகளுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. மழைக்காலங்களில் பொதுமக்கள் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டும். காய்ச்சிய பின்னரே குடிநீர் குடிக்க வேண்டும். 

மழைக்காலத்தில் நீர்வரத்து வாய்க்கால்களை கடப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவவாய்ப்பு உள்ளதால் மழைநீர் வீட்டை சுற்றி தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 

ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Post a comment

0 Comments