கொரோனா சிகிச்சையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 110 பேர் ‘டிஸ்சார்ஜ்’புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 110 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 110 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். 64 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது.

தற்போது ஆயிரத்து 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 338 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல சித்த மருத்துவ சிகிச்சையிலும் 6 நாட்களில் பூரண குணமடைந்து 18 பேர் வீடு திரும்பினர்.

Post a comment

0 Comments