புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடற்ற, ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடற்ற, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு, உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குவதுடன், கூடுதலாக அத்தகையோரின் குடும்பத்தை கண்டறிந்து சேர்த்து வைப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மக்கள் நல்வாழ்வுத்துறையால் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கென மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக ‘மனநோய் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்’ தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டையில் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வகையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆதரவற்ற மனநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். 

எனவே ஆதரவற்று வீடில்லாமல் சுற்றித்திரியும் மனநோயாளிகள் பற்றிய விவரங்களை 9486067686 என்ற செல்போன் எண்ணில் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதரவற்ற மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக திகழ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments