புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் வசதி.. கலெக்டர் தகவல்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நோய் தொற்றை கண்டறியும் வகையில் அதிக அளவிலான மருத்துவமுகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தங்களுடைய கோவிட்-19 பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொண்டவர்களின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் இணையதள முகவரி மற்றும் ளுசுகு ஐனு அனுப்பப்படும். இதன் வாயிலாக கோவிட்-19 பரிசோதனை முடிவுகளை தங்களது அலைபேசி எண் அல்லது ளுசுகு SRF ID-யினையோ பயன்படுத்தி http://www.covidpdktmc.com/ என்ற இணையத்தின் வாயிலாக எளிய முறையில் பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments