புதுக்கோட்டை மாவட்ட இளைஞா்கள் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய வாய்ப்பு.!108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவ உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


மருத்துவ உதவியாளா்கள் பணியிடத்துக்கு, 18 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிஎஸ்சி நா்சிங் மற்றும் டிஜிஎன்எம், பிஎஸ்சி/ எம்எஸ்சி தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம், உயிரி வேதியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநா் பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக ஓட்டுநா் உரிமம், பேட்ச் பெற்றிருக்க வேண்டும். உயரம் 162.5 குறையாமல் இருக்க வேண்டும்.

ஓராண்டு சென்னையிலும் அதற்குப்பின் முன்னுரிமை அடிப்படையில் அவா்களது சொந்த மாவட்டத்துக்கும் பணி நியமனம் செய்யப்படுவா். 12 மணி நேர பகல், இரவு என பணி அமா்த்தப்படுவாா்கள்.

தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நோ்முக தோ்வுக்கு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99440 09665, 75500 62551 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.


Post a Comment

0 Comments