கோபாலப்பட்டிணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எரியாத தெரு விளக்கு.! கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர்.!



கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால் தோப்பு சாலை கடந்த ஒரு மதத்திற்கு மேலாக இருளில் மூழ்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த ஒரு மதத்திற்கு மேலாக தெரு விளக்கு எரியாமல் இருளிலில் மூழ்கி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் இரவில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். மழைக்காலங்களாக இருப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் அந்த வழியாக குடிதண்ணீர் எடுத்து செல்லும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் அந்த பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் இதுவரை தெரு விளக்கு எரிய எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இது சம்மந்தமாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கூறுகையில் ஒரு மாதத்திற்கு மேலாக எரியாத தெரு விளக்கு பற்றி வார்டு பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் எரியாமல் உள்ள தெருவிளக்கு சம்மந்தமாக பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கவனத்திற்கு எடுத்து சென்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிப்பதாகவும், மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகம் தன்னுடைய கடமைகளை சரிவர செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தெரு விளக்கு எரியாதது பற்றி வட்டார வளர்ச்சி அலுவரிடம் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே தெருவிளக்கை உடனடியாக சரி செய்து அப்பகுதி மக்கள் வெளிச்சம் பெற நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 


Post a Comment

0 Comments