கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.!கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவர்கள் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் வங்க கடலுலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லக் கூடாது என்று மீன்வளத்துறையின் மூலம் உத்தரவிடப்படுள்ளது. 

இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள்.


Post a Comment

0 Comments