கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம் நடைபெற்றது.

கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொரோனோ ஊரடங்கு காலம் என்பதால் அரசு சமூக இடைவெளியை பின்பற்றியும், குறைவான மக்களை கொண்டும் விழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது மக்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மாலையில் ரதம் ஊர்வலம் நடைபெற்றது. ரதம் பெரிய பள்ளிவாசல் என்னும் இடத்தில் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று தர்காவை வந்தடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Post a Comment

0 Comments