சவூதி தேசிய தினம் மற்றும் தமுமுக-வின் வெள்ளி விழாவை முன்னிட்டு ரியாத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்..!சவுதி அரேபியாவின் 90-வது தேசிய தினம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ரியாத் மண்டல தமுமுக பத்தாஹ் & சுவைதி கிளை மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 25/09/2020 வெள்ளிக்கிழமை அன்று பத்தாஹ்வில் நடமாடும் இரத்த வங்கி வாகனம் மூலம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமிற்கு மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்க, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளரும் மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளருமான அறந்தை சித்திக் அவர்களும், ரியாத் மண்டல மருத்துவரணி செயலாளர் மங்களகுடி தாஹா ரசூல் அவர்களும் மண்டல நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

ரியாத் மண்டல தமுமுக மமக துணைத் தலைவர் செங்கோட்டை அப்துர் ரஹீம் அவர்களும் மற்றும் ரியாத் மண்டல வணிகர் அணி செயலாளர் விருத்தாச்சலம் பீர் முகமது அவர்களும் இணைந்து இந்த இரத்ததான முகாமை துவக்கி வைத்தனர்.

இந்த இரத்ததான முகாமில்  சுமார் 100-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்கேற்று இரத்ததானம் வழங்க முன் வந்தனர். ஆனால் நேரமின்மை காரணமாக 75 சகோதரர்கள் மட்டும் தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர். 

மேலும் இரத்ததானம் வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக பாராட்டு சான்றிதழும் , பரிசுப்பையும் வழங்கப்பட்டது.

இரத்ததான கொடையாளர்களுக்கும்,  களப்பணியாளர்களுக்கும், இரத்தவங்கி ஊழியர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு, தேநீர், பழச்சாறு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பு முக கவசம் போன்றவைகளை முகாமின்  களப்பணியாளர்களாக செயல்பட்ட தலைமை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து விநியோகம் செய்தனர்.


மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் மற்ற கிளைகளை யாரையும் நேரடியாக சென்று சந்தித்து அழைப்பு பணி செய்ய முடியாத சூழ்நிலையிலும் தொலைப்பேசி வாயிலாக மற்றும் சமூக ஊடக வாயிலாக மிக சிறப்பான முறையில் பத்தாஹ் கிளை தலைவர் தாஜுதீன் மற்றும் சுவைதி கிளை தலைவர் இஸ்மாயில் ஆகியோரது தலைமையில் கிளை நிர்வாகிகள் சிறப்பான முறையில் அழைப்பு பணியில் ஈடுபட்டனர் என்று கூறினால் மிகையாகாது.

இந்த இரத்ததான முகாமை ஒருங்கிணைத்த சகோதரர்களுக்கும், முகாமிற்கான உணவு மற்றும் வாகன ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும், பல்வேறு வகையில் உதவி அளித்த ST கார்கோ மற்றும் CSK உணவக நிறுவனத்திற்கும், பல கிளைகளிலிருந்து இரத்த வங்கிக்கு வருகை புரிந்த சகோதரர்களுக்கும், களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும்,  ஊடக ரீதியாக உதவி செய்த ரியாத் மண்டல ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் கோபாலப்பட்டிணம் முகமது ரிஸ்வான் மற்றும் வருகை பதிவேடு பணியை சிறப்பாக முன்னெடுத்து செய்த  மண்டல செயற்குழு உறுப்பினர் ஆசிக் இக்பால் அவர்களுக்கும், 

இரத்தவங்கி வாகனம் நிறுத்துவதற்கு உதவிய சகோ.சாதிக் அவர்களுக்கும், மதிய உணவிற்கு பொருளாதார பங்களிப்பு வழங்கிய சகோ. சேலம் நூர் அவர்களுக்கும் அந்த உணவை தயாரித்து வழங்கிய சகோதரிகளுக்கும், அனைவருக்கும் குடிநீர் வழங்கிய நாசர் பாய் அவர்களுக்கும் , கூடாரம் அமைத்த சகோ.பீர் முஹம்மது அவர்களுக்கும், அதற்கு மின்சாரம் வழங்கிய கார்கோ மற்றும் ரீஜென்சி உணவகத்திற்கும், இரத்த வங்கி செவிலியர்களுக்கு உதவியாளர்களாக செயல்பட்ட சகோ. ஜாவித் மற்றும் சகோ.அக்பர் அவர்களுக்கும், முகாமிற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய மண்டல - கிளை நிர்வாகிகளுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இது போன்று ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இந்த இரத்ததான முகாமில் மற்றொரு சிறப்பு நிகழ்வாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வெளிநாட்டு பிரிவான செயல்பட இருக்கும் தமிழக மக்கள் பண்பாட்டுப் பேரவை அறிமுகம் செய்யப்பட்டது.

இறுதியாக இரத்த வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்பை பெருமைபடுத்தும் விதமாக இரத்த வங்கி ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க ,  துவாவுடன் முகாம் இனிதே நிறைவடைந்தது.

தகவல்
தமிழ் தஃவா தமுமுக - மமக 
ஊடகப்பிரிவு 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவூதி அரேபியா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments